கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்- நேரில் கண்ட மகளுக்கு நேர்ந்த கதி

கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் கண்ட தனது மகளை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே உள்ள கோடப்பமந்து பகுதியில் வசிப்பவர் ராஜலட்சுமி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 12 வயது மகளுடன் ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், ராஜலட்சுமிக்கு பல ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவர்களுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதை பலமுறை அவரின் மகள் நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தனது பாட்டியிடம் அந்த சிறுமி கூறி வந்தாள். இது ராஜலட்சுமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மகள் உயிரோடு இருக்கும் வரை நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது என விபரீத முடிவை எடுத்த அவர்,

மகளென்றும் பாராமல் சிறுமியின் கழுத்தி நெறித்து கொலை செய்தார். ஆனால், சேலை இறுக்கி தனது மகள் இறந்துவிட்டதாக போலீசாரிடம் நாடகம் ஆடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் அவர்தான் கொலையாளி என்பதை ஒப்புக்கொண்டார். எனவே, போலீசார் அவரை கைது செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]