களுவாஞ்சிக்குடியில் வாகன விபத்து

களுவாஞ்சிக்குடியில் வாகன விபத்து

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று (02) அதிகாலை விபத்தில் இருவர் படுகாயம்.

பற்று பிரதேச செயலகத்தின் முன்பாக சிறிய ரக டிப்பர் வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த வாகனம் வேக கட்டுப்பாட்டையிழந்த நிலையில் மின் கம்பத்தில் மோதியுள்ளது.

இதில் பயணித்த திருகோணமலையைச் கிண்ணியா சேர்ந்த அயர்தீன் தாபீன் (27வயது) ரபீக் சியாம் (30 வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்து வாகன விபத்துவாகன விபத்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]