களுத்தில் கத்தியை வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் 13 வயது சிறமியின் களுத்தில் இளைஞர் ஒருவர் கத்தியை வைத்து கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த போது காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழசைச் சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து சந்தேகத்தில் ஒருவரை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது,

களுத்தில் கத்தியை

வாழைச்சேனை வாகனேரி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு ஆலய உட்சவத்திற்கு குறித்த சிறுமி, அவரது சகோதரி, அவரது கணவன் ஆகியோருடன் சென்று நள்ளிரவு வீடுதிரும்பிய நிலையில் வீட்டின் கதவை பூட்டாது நித்திரைக்குச் சென்றுள்ளனர்.

அதிகாலை 2 மணியளவில் குறித்த வீட்டிற்குள் முகத்தை மூடியவாறு இளைஞர் ஒருவர் உட்புகுந்து சிறுமியின் களுத்தில் கத்தியை வைத்து அவரை பலாத்தகாரமாக தூக்கிக் கொண்டு வெளியே வந்தநிலையில் சிறுமியின் சகோதரி ஏதே சத்தம் வருவதை கேட்டு நித்திரையில் எழும்பிய போத சகோதரியை இளைஞர் ஒருவர் தாக்கிகொண்டு ஓடுவதை அவதானித்து சத்தமிட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் வந்ததுடன் சிறமியை தேடியபோது அவரை அருகில் உள்ள குளக்கட்டுப்பகுதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஆலய உற்சவத்திற்கு சென்ற 15 வயது சிறுமியை அதிகாலை 1.30 மணியளவில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்றித்த போது அங்கிருந்த இளைஞர்கள் அச்சிறுமியை காப்பாற்றியுள்ளனர். குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளதுடன் அவருடன் சென்ற மாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த நண்பனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார், மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]