முகப்பு News Local News களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு

களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு

மொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில், களு கங்கையில் நீரை பாய்ச்சும் நடவடிக்கைகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக்கட்டமான மொரகஹந்த திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஐந்து நீர்த்தேக்கங்களின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும்.

இதன்மூலம் 84 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீரைப் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் இந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com