முகப்பு News Local News களியாட்டத்தில் உயிரிழப்பு; இருவர் கைது

களியாட்டத்தில் உயிரிழப்பு; இருவர் கைது

வாதுவ பகுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரசார அதிகாரி ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாதுவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு களியாட்ட நிகழ்வொன்று இடம்பெற்றது.

அதன்போது, திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தனர்.

அதனையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com