களவுபோன சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் – தாயும் மகனும் கைது

களவுபோன சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் – தாயும் மகனும் கைது

ஜனாதிபதியின் மகளான சத்துரிக்கா சிறிசேனவினுடையதைப் ​போன்ற கையொப்பத்தை இட்டு அரச வங்கியொன்றில் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட தாயும் மகனும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும், 29 ஆம் திகதிவரை இருவரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்தேகநபரினால் அரச வங்கியொன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனுக்கு சலுகை வழங்க கோரி ஜனாதிபதி செயலகத்தின் போலியான கடிதத்தலைப்பில் சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பத்துடன் வங்கியில் சமர்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக, உறுதிப்படுத்துவதற்கு சத்துரிக்கா சிறிசேனவிடம் வங்கி தரப்பினர் தொடர்பு கொண்டு வினவிய போது இது போலியான கடிதம் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சத்துரிக்கா சிறிசேன குற்றவிசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அதன்படி சந்தேக நபர்களான தாயும் மகனும் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]