கல்வியை தொடர்வதற்கு கோட்டாபய சீனாவுக்கு பயணம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் அதிகாலை, சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.

சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார முகாமைத்துவ கற்கைநெறி ஒன்றைத் தொடர்வதற்காகவே, அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாண்டு அரசியல் கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், யுனான் பல்கலைக்கழகத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தொடரவுள்ள கற்கைநெறி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]