கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.எஸ். யோகராசா

ஏ.எஸ். யோகராசா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வராகப் பணிபுரிந்த ஏ.எஸ். யோகராசா வியாழக்கிழமையுடன் 19.04.2018 தனது 33 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரில் 19ஆம் திகதி வரை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சுமார் 8 வருடமாக முதல்வராக கடமையாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளார்.

அதேவேளை இவர் தற்போது திறந்த பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும், பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஆசிரியர்களுக்கு முதன்மை ஆசிரியராகவும், தேசியகல்வி நிறுவகத்தின் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

ஆரம்பக்கல்வியை பெரியகல்லாறு ஆரம்பப் பாடசாலையான விநாயகர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லூரியிலும் சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தினை கோட்டமுனை மகாவித்தியாலயத்திலும் பயின்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தினையும் நிறைவு செய்த இவர் ஆரம்பத்தில் சில காலம் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]