கல்லூரி மாணவி கை, மணிக்கட்டும் மற்றும் விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு – ஒருதலை காதலன் கைது!..

தமிழ்நாடு – கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தவர் பிரகதி. இவரை காணவில்லை என பெறடறோர் கடந்த வெள்ளிக்கிழகை பொலிஸ் நிலைத்தில் புகார் செய்துள்ளனர்.

இதன் பின்னர் பிரகதி பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் உள்ள ஏ நாகூர் பகுதியில் அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். கொலை செய்யப்பட்டு கிடந்த பிரகதியின் கை, மணிக்கட்டும் மற்றும் விரல்கள் ஆகியவை வெட்டப்பட்டு இருந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், அந்த பெண்ணிற்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாகவும், திருமண புடவை எடுப்பதற்காக மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையிலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சிசிடிவி கமெரா காட்சிகளின் அடிப்படையில் சதீஷ் என்ற இளைஞர் பொலிசாரிடம் சிக்கினார். இவர் மாணவியின் தூரத்து உறவினர் என்பது தெரியவந்துள்ளது. மாணவி பள்ளி படிக்கும்போதே சதீஷ், மாணவியின் வீட்டில் பெண் கேட்டுள்ளார்.

அதற்கு பிரகதி பள்ளி தான் படிக்கிறார். இப்போது திருமணம் செய்துவைக்க முடியாது என பெற்றோர் மறுத்துள்ளனர். இதற்கிடையில் அவருக்கு திருமணமும் ஆகியுள்ளது.

திருமணம் ஆன பின்பும் கூட, பிரகதியை பெண் கேட்டு மீண்டும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரகதி விரும்பிய இளைஞருடன் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.

இந்நிலையில் தான் பிரகதி கல்லூரி விடுதியை விட்டு வழக்கம்போல வீட்டிற்கு செல்ல வந்த நிலையில் காணமல் போயுள்ளார், அதன் பின்னரே அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]