கல்லூரி மாணவிகள் மூன்று பேர் நீரில் மூழ்கி பலி!

கடலுக்கு நீராட சென்ற மூன்று கல்லூரி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று காலை 7 மாணவிகள் பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதில் ஐந்து மாணவிகள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, பெரிய அலையில் சிக்கிய 5 மாணவிகளும் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர்.

அப்பகுதி மீனவர்கள் சங்கீதா, ஹசீனா பேகம் ஆகிய இரு மாணவிகளை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஏனைய மூன்று மாணவிகள் உயிரிழந்தனர்.

இவர்கள் மயிலாடுதுறை-தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பி.ஏ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]