கல்கிஸ்ஸையில் ரோஹிங்யா அகதிகள் மீது தாக்குதல் – மங்கள சமரவீர

ரோஹிங்யா கல்கிஸ்ஸையில் ரோஹிங்யா அகதிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட குறித்த அகதிகள், ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பில் கல்கிஸ்ஸையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரி அடிப்படைவாத பௌத்த பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்தக்கு அமைச்சராக மாத்திரம் இன்றி, ஒரு பௌத்தமதத்தை சார்ந்தவர் என்ற அடிப்படையிலும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த அகதிகள் இலங்கையில் அன்றி, அமெரிக்கா அல்லது கனடா போன்ற மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றப்படவுள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறு அகதிகள் சிலகாலம் இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்து பின்னர் மூன்றாம் நாடொன்றில் குடியேற்றப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் குறித்த அகதிகளுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் இந்த சம்பவத்துக்கு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரக அலுவலகமும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் எச்சரிக்கை செய்வதாக அமைந்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் இடம்பெற்ற போது, அங்கிருந்த அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலர்களது பாதுகாப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று, தமது அறிக்கை ஒன்றில் உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.