முகப்பு Cinema கலைஞரின் இறுதி அஞ்சலிக்கு வராத விஜய் – வெளிவந்த காரணம்

கலைஞரின் இறுதி அஞ்சலிக்கு வராத விஜய் – வெளிவந்த காரணம்

கலைஞர் அவர்கள் கலை மீதும்,தமிழ் மீதும் தீராத பற்று கொண்டவர். பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள கலைஞர் அவர்களின் இழப்பு தமிழ் சினிமாவிற்கும் ஒரு ஈடு இணையில்லாத இழப்புதுதான். அவரின் மறைவையோட்டி அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியன் மறைவு அவர்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு முக்கிய பிரமுகலர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு நடிகர்களும் கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செய்து வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினி,கமல், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு நேரில் சென்று தங்களது இரங்கலையும், இறுதி மரியாதையையும் செலுத்தினர். ஆனால், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் மட்டும் இன்னும் கலைஞர் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் இன்னும் காணவில்லை. தற்போது ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருக்கிறார் விஜய்.

இருப்பினும் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி மரியாதை அளிக்கும் வகையில் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாம். மேலும், கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள விஜய் வெளிநாட்டில் இருந்து புறப்பட்டுவிட்டாரா இல்லையா என்ற தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com