கலால் அதிகாரி வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதல்

வடமேல் மாகாண கலால் உதவி ஆணையாளர் லேஸ்லி ஜெயரத்னவின் வீடு மீது கைக் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாகதுர பகுதியிலுள்ள வீட்டிற்கு இன்று அதிகாலை 01.00 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதவி ஆணையாளர் லேஸ்லி ஜெயரத்ன வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைக்குண்டு தாக்குதல் காரணமாக வீட்டில் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று தெரிவித்த பன்னல பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]