முகப்பு News Local News கலஹா வைத்தியசாலையில் பெரும் பதற்றநிலை- பொலிஸார் குவிப்பு

கலஹா வைத்தியசாலையில் பெரும் பதற்றநிலை- பொலிஸார் குவிப்பு

கண்டி, கலஹா வைத்தியசாலையில் பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலஹா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று இறந்த சம்பவம் தொடர்பில் தற்போது வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குழந்தை ஒன்றை வைத்தியசாலை அனுமதிக்க தாமதம் ஏற்பட்டதில் குறித்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து இவ்வாறு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

700 இற்கு அதிகமாக நபர்கள் அவ்விடத்தில் கூடி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com