கலக்கும் துருவ் விக்ரமின் டப்மேஷ் வீடியோ!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விக்ரமை மிஞ்ச யாராலும் முடியாது என்னுமளவுக்கு அவரது படங்கள் இருக்கும்.

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ மற்றும் விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படங்களில் நடித்து வருகிறார். விக்ரமின் மகனான துருவ் விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக முன்னதாக செய்திகள் வந்தன.

துருவ்வும் அதற்கேற்றாற் போல் தனது டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

பெரும்பாலும் ஆங்கில படங்களின் பிரபல வசனங்களை டப்மாஷ் செய்திருக்கும் துருவ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரபல வசனங்களான “ஐயா.. என் பேரு மாணிக்கம்…. எனக்கு இன்னொரு பேரு இருக்கு..”, “போடா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..”, ப்ரெண்டு லவ் மேட்டரு, ஃபீல் ஆய்ப்டாப்புல, ஹாஃப் சாப்டா கூல் ஆய்ருவாப்புல… உள்ளிட்ட வசனங்களை டப்மாஷ் செய்திருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனினும் துருவ் விக்ரம் படத்தில் நடிக்க வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]