கற்பழிக்கப்பட்ட மாணவி 35 கத்திக்குத்துகளுடன் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்

மூன்று பேரால் 16 வயது மணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் அசிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் கோடினார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பில் கல்வி பயிலும் குறித்த மாணவி சம்பவம் நடந்ததற்கு முன்தினம் காலை 8.30 மணியலவில் கையில் ஒரு புத்தகத்துடன் போனில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

ஆனால் ஒரு மணிநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர் அந்தப் பகுதிகளில் உள்ள இடங்களில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் பொலிசில் புகாரும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3ற்கும் மேற்பட்ட நபர்களால் மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவருடைய உடலில் 35-ற்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]