பெருந்தோட்டத் தொழிலாளர்களின், 1,000 ரூபாய் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்புவாழ் மலையக இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், கொழும்பு காலி முகத்திடலில், இன்று (24) இடம்பெற்று வருகிறது.

இதனால் குறித்த பகுதியில் லோட்டஸ் சுற்றவட்டத்தின் ஊடான வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு கலகம் அடக்கும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதில், கொழும்பையும் ஏனைய பகுதிகளையும் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவையும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கு இடையில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு முன்னால் வீதி தடைகளை பயன்படுத்தி பொலிஸார் வீதிகளை மறைத்துள்ளனர்.

அத்துடன் நீர் பிரயோகம் மேற்கொள்வதற்காக அவ்விடத்திற்கு நீர் பவுசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]