கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபவது நல்லதே!!!

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபவது நல்லதே!!!

இந்த நவநாகரிக காலத்தில் தம்பதிகள் பலர் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் கர்ப்ப காலத்தின் போது உடலுறவு கொள்வது என்பது எந்த வகையிலும் குழந்தைக்கு ஆபத்தாக அமையாது என்பதே. கர்ப்ப காலத்தில் தன் துணையுடன் உடலுறவு வைத்துக் கொள்வதால், பிரசவம் எளிமையானதாகிறது!!!

உடலுறவில் ஈடுபவது

ஒரு சிலர் ஆணுறுப்பு குழந்தையையோ அல்லது கருப்பையையோ துன்புறுத்துவதாக பயம் கொள்வார்கள். ஆனால் இவ்வாறு நடப்பதில்லை.. எனவே நீங்கள் கர்ப்ப காலத்தில் தினசரி உடலுறவு கொள்ளலாம்!!!

மருத்துவர் எவரேனும் உங்களை கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தால் மட்டும் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். பிறர் தாராளமாக கர்ப்ப காலத்தில் தினசரி உடலுறவு கொள்ளலாம். இந்த பகுதியில் கர்ப்ப காலத்தில் தினசரி உடலுறவு கொள்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றி காணலாம்.

1. உச்சமடைதல்

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் உங்களது ஹார்மோன்கள் உச்ச நிலையில் இருக்கும். மேலும் உங்களது மார்பகம் மற்றும் இடுப்பு எலும்பு பகுதியில் இந்த சமயத்தில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் எனவே நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சநிலையை அடையலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் அடையும் உச்சநிலையானது மறக்க முடியாததும், அதிகமானதாகவும் இருக்கும்.

2. ஆரோக்கியமானது

உடலுறவில் ஈடுபவது

பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். இந்த கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் உங்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெண்களுக்கு இது மிகவும் சிறந்ததாகும்.

3. உடற்பயிற்சி

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சி கர்ப்ப காலத்தையும், பிரசவத்தையும் எளிமையாக்குகிறது. நீங்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் 50 முதல் 150 கலோரிகள் வரை குறைக்கலாம். இது நீங்கள் எவ்வளவு நேரம் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பதை பொருத்து மாறுபடும்.

4. மகிழ்ச்சி

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இவ்வாறு ஒரு கர்ப்பிணி மகிழ்ச்சியாக இருந்தால் தான், கருவில் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கும். உடலுறவு என்பதை ஒரு பெண்ணை மகிழ்ச்சியாக்குகிறது. அதோடு மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

5. இரத்த அழுத்தம்

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று தான் இரத்த அழுத்தம்.. கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் இந்த இரத்த அழுத்தமானது சமநிலையை அடைகிறது.

 

6. வலியை குறைக்கும்

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது பிரசவ காலத்தில் மிக முக்கியமாக செயல்படும் இடுப்பு எழும்புகள் வலிமையடையும். இதனால் பிரசவம் சுலபமாகிறது..!

 

 

7. நெருக்கம்

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் உடலுறவின் போது உச்சமடையும் போது ஆக்ஸிடோசின் வெளிப்படுகிறது. இது மகிழ்ச்சிக்கான ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் வெளிப்படுவதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரிக்கிறது.

8. நல்ல தூக்கம்

உடலுறவில் ஈடுபவது

உடலுறவுக்கு பின்னர் வெளிப்படும் என்டோபிசின் என்ற ஹார்மோன் ஆனது உங்களை இன்பத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லும். இதனால் நீங்கள் மனநிறைவான, நிம்மதியான தூக்கத்தை பெறலாம்..

9. மன ஊக்கம்

உடலுறவில் ஈடுபவது

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் சில பெண்களுக்கு தன் அழகில் சந்தேகம் வரும். உடலுறவு என்பது பெண்களுக்கு தங்களது வெளித்தோற்றத்தின் மீது ஒரு நம்பிக்கையை வர செய்யும். இதனால் பெண்கள் தங்களை நேசிப்பார்கள். மனது உறுதியாகும்.

10. தினசரி உடலுறவு

உடலுறவில் ஈடுபவது

தினசரி உடலுறவு கொள்வதால் விந்தணுக்களின் திறன் குறையுமா என்ற கேள்வி அனைவரின் முக்கிய கேள்வியாகும். தினசரி உடலுறவு வைத்துக் கொள்வது என்பது ஆரோக்கியமானது தான்.

இவ்வாறு உடலுறவில் ஈடுபவது என்பது உங்களுக்கு கருவுறுதல் பிரச்சனை இல்லை என்றால் உங்களது விந்தணுக்களை பாதிக்காது. பல ஆய்வுகள் தினசரி உடலுறவு வைத்துக் கொள்வதால், விந்தணுக்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது என்று கூறுகின்றன. குறைவான விந்தணுக்களை கொண்டுள்ளவர்களுக்கு தினசரி உடலுறவு கொண்டால் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று நம்பப்படுகிறது.

11. குறைவான விந்தணுக்கள்

உடலுறவில் ஈடுபவது

நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, குறைவான விந்தணுக்கள் தான் உள்ளது என்று மருத்துவர் தெரிவித்துவிட்டால் நீங்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பது கருவுறுவதை தமாதமாக்கும். ஒவ்வொரு முறையு ஆணின் விந்தணுக்கள் வெளியேறுவதால், அவரது உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே இது மீண்டும் அதிகரிக்க சில காலம் தேவைப்படுகிறது.

12. விந்தணு உருவாகும் காலம்

உடலுறவில் ஈடுபவது

விந்தணுக்கள் உருவாக எடுத்துக் கொள்ளும் காலம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். இது மீண்டும் உருவாக 24 முதல் 48 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே 36 மணிநேர இடைவெளியில் உடலுறவு கொள்வது என்பது கரு உருவாக வழிவகுக்கும்.

13. கால இடைவெளி

உடலுறவில் ஈடுபவது

இது பற்றி நடந்த ஆராய்ச்சிகளில் ஆண்கள் தினசரி ஒரு மாதம் காலம் உடலுறவு கொள்வதால் அவர்களது விந்தணுக்களின் திறனும், டி.என்.ஏக்களும் முழுமை பெருவதில்லையாம். அதுவே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளிகளில் உடலுறவு கொள்வதால் அவர்களது விந்தணுக்களின் திறனில் எந்த விதமான மாற்றமும் இல்லையாம்.

14. இவர்களுக்கு மட்டும் தான்

உடலுறவில் ஈடுபவது

தினசரி உடலுறவு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பது, விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு தினசரி உடலுறவு ஆரோக்கியமானது தான். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள், மாதவிடாய் நெருங்கும் காலங்களில் உடலுறவு கொள்வது கருவுற வழிவகுக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]