லண்டன் மாடல் அழகியான எமி ஜாக்சன், ‘மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்த எமி ஜாக்சன், ’பூகி மேன்’ என்ற ஆங்கிலப் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மீண்டும் லண்டன் பறந்தவர், அங்கேயே செட்டிலாகிவிட்டார். இதை தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்தவர், ஹாலிவுட் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வந்தார். மேலும், அவ்வபோது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தவர், திடீரென்று தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஹாலிவுட் நடிகையாகும் முயற்சியில் இறங்கிய எமி ஜாக்சன், தற்போது ஹாலிவுட் அம்மாவகப் போகிறார். கர்ப்பமாக இருந்தாலும், அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதை மட்டும் எமி ஜாக்சன் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்.

இந்த நிலையில், எமி ஜாக்சன் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்திருக்கிறது. ஆம், காதலருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருக்கும் எமி ஜாக்சன், அங்கு பிகினி உடையில் கோல்ப் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மற்ற நேரங்களில் ஓகே, ஆனால், கர்ப்பக் காலத்திலும் இதுபோன்ற படு கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை எமி நிறுத்தாமல் தொடர்வது ரொம்ப ஓவராகவே இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்தாலும், எமியின் அந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

கர்ப்ப காலத்தில் கர்ப்ப காலத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]