கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து கருவை எடுத்த அரக்க குணம் கொண்ட பெண்!!

மெக்ஸிகோவில் 20 வயது பெண்ணை கொலை செய்து அவரது வயிற்றில் இருந்த கருவையும் வெளியில் எடுத்த அரக்க குணம் கொண்ட பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Tamaulipas மாகாணத்தை சேர்ந்த பாத்திமா என்பவர் தனது கணவர் ஒமர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பாதிமா சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் வாயிலாக 20 வயது நிறைமாத கர்ப்பிணி ஜெசிக்காவை தொடர்பு கொண்டுள்ளார்.
அவருடன், மெசஞ்சர் வாயிலா தொடர்ந்து உரையாடியுள்ளார், பின்னர் தனது வீட்டுக்கு வரவழைத்து, பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளை கொடுத்துள்ளார்.

இதனால் பாத்திமாவுடன்ஜெசிக்கா நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று, ஜெசிக்காவை தனது வீட்டிற்கு வரவழைத்த பாத்திமா, தனது கணவருடன் சேர்ந்தது ஜெசிக்காவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், ஜெசிக்காவின் கர்ப்பப்பையிலிருந்து கருவை தனியாக எடுத்துள்ளார். உடல்களை தனது வீட்டில் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்த உடலை பார்த்த அருகில் வசிப்பவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, பாத்திமா இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல்முறை கிடையாது, கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தொடர்புகொண்டுஅவருக்கு உதவிகள் செய்வது போன்று அவர்களை கொலை செய்வதோடு மட்டுமல்லாமல் குறிப்பாக அப்பெண்களின் வயிற்றில் இருக்கும் கருவை வெளியில் எடுப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார்.

கருவை வெளியில் எடுத்தவுடன், அது தனது குழந்தை என்றும் இறந்துவிட்டது என கூறிக்கொள்வார். தற்போது பாத்திமா மற்றும் அவரது ஓமர் ஆகிய இருவரையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இவர்எவ்வாறு கர்ப்பப்பையிலிருந்து கருவை எடுக்கிறார் மற்றும் அதற்கான காரணங்கள் இன்னும்வெளியாகவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]