கர்ப்பிணி தோற்றத்தில் நிர்வாணக் கோலம்: இணையத்தை கலக்கும் செரினா வில்லியம்ஸ்

சர்வதேச டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை செரினா வில்லியம்ஸ்(35). மணிக்கு 120 மைல் வேகத்தில் புயலாக சீறும் இவர

து டெலிவரி எந்தப் பக்கம் பாயும் என்பதை யூகிப்பது மிகவும் கடினமான ஒன்று.

கடந்த 2015-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடுவதற்காக இத்தாலி நாட்டுக்கு சென்றபோது ரெடிட் சமூக வலைதளத்தின் இணை இயக்குனர் அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை செரினா வில்லியம்ஸ் ரோம் நகரில் சந்தித்தார்.

அப்போது அவர்களிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இவர்கள் இல்லற வாழ்வில் இணைய தீர்மானித்தனர். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர்.

இதனிடையே, அலெக்சிஸ் ஓஹானியனுடனான நெருக்கத்தின் வெளிப்பாடாக தான் கருவுற்றிருப்பதை அறியாத செரீனா தனது உடலுக்குள் ஏற்பட்டுள்ள திடீர் சோர்வு மற்றும் மாற்றங்கள் தொடர்பாக தனது நெருங்கிய தோழியிடம் கூறினார்.

தோழியின் ஆலோசனைப்படி கர்ப்பத்துக்கான மருத்துவ சுய பரிசோதனை செய்து கொண்டதில் அவர் கருவுற்றிருப்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, டாக்டரை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டபோது அவரது வயிற்றில் உள்ள கரு ஆறுவார வளர்ச்சி அடைந்துள்ள விபரம் செரீனாவை ஒரு உலுக்கு உலுக்கியது.

ஏனெனில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அவர் விளையாடினால் கருவுக்கு ஆபத்து நேரலாம் என்பது அவரது அச்சமாக இருந்தது. எனினும், டாக்டரின் ஆலோசனை மற்றும் அறிவுரைக்கு பின்னர் அவர் அந்தப் போட்டியில் பங்கேற்றார்.
ஜனவரி 29-ம் தேதி வயிற்றில் வளரும் கருவுடன் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தனது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால், அப்போது அவர் கருவுற்றிருந்த விஷயம் அவரது டாக்டர் மற்றும் நெருக்கமான மேலும் இருவருக்கு மட்டுமே தெரியும். அவரது பயிற்சியாளருக்கு கூட தெரியாமல் இருந்தது.

இதன் பின்னர் வலது மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

காயத்தினால் கிடைத்த ஓய்வுக்காலத்தின்போது தனது கர்ப்பத்தை பகிரங்கமாக வெளியுலகுக்கு அறிவித்த செரீனா வில்லியம்ஸ், 20 வார கருக்காலத்தின்போது ‘ஸ்னாப் ஷாட்’ மூலம் ஒரு ரம்மியமான புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல அழகு குறிப்பு பத்திரிகையான வானிட்டி ஃபேர் இதழின் அட்டை படத்துக்கு செரீனா வில்லியம்ஸ் கர்ப்பிணி தோற்றத்தில் தற்போது முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த அட்டைப் படத்தை மையமாக வைத்து செரீனா வில்லியம்ஸின் காதல் போட்டி (Serena Williams’s Love Match) என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது.

டென்னிஸ் வீராங்கனையாக செரீனாவின் சாதனைகள், காதலருடனான முதல் சந்திப்பு, அலெக்சிஸ் ஓஹானியன் தனது காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யமான சம்பவம், தான் கருவுற்றிருக்கும் நல்ல தகவலை அவருக்கு தெரிவிக்க அவசரமாக அழைத்த பரபரப்பு, திருமணம் செய்து கொள்வதை தள்ளி வைத்துள்ளது ஏன்? என்பது உள்ளிட்ட அவரது மலரும் நினைவுகளுடன் அந்த கட்டுரை வெளியாகியுள்ளது.

பிறக்கப் போவது, ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்குறியுடன் அந்த புகைப்படத்தை செரீனா வில்லியம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் மூலம் பல லட்சம் லைக் மற்றும் ஷேர்களின் வாயிலாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ள அந்த நிர்வாணப் புகைப்படம் செரீனாவின் தீவிர ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]