கர்ப்பிணி ஆட்டை கூட்டுபலாத்காரம் செய்த 8பேர்- பொலிஸ் வலைவீச்சு

அரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று மேவாட் ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இதில் ஒரு பெண் ஆடு திடீரென காணாமல் போனது. காணாமல் போன அந்த ஆடு அப்போது கர்ப்பமாக இருந்தது. ஊரெங்கும் தேடிய ஆட்டின் உரிமையாளர் அந்த ஆட்டை பிணமாக கண்டுள்ளார்.

அதன் பிறகு விசாரித்ததில் அந்த கர்ப்பிணி ஆட்டை 8 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஆட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் அவர் சவாகர், ஹாரூன், ஜாபர் மற்றும் அடையாளம் தெரியாத ஐவரால் தனது ஆடு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதனால் மரணம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்டை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் 8 பேரும் தலைமறைவு ஆகி விட்டனர். காவல்துறையினர் இது குறித்த புகாரை பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். அத்துடன் இறந்த ஆட்டின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]