கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு எளிமையான ஆடை அணிய அனுமதி

பாடசாலைகளில் கடமை புரியும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதற்காக புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் அங்குரார்பண நிகழ்வு கல்வித் திணைக்களத்தில் நாளை நடைபெறவுள்ளது.

பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளை முதல் இந்த எளிமையான ஆடையை அணிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]