கர்நாடகாவில் பாரிய விபத்து – பலர் சிக்கியிருப்பதாக அச்சம்

கர்நாடகாவில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

கர்நாடக மாநிலம், குமரேஷ்வர் நகர், தர்வாத் என்ற பகுதியில், கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ஆறு மாடி குடியிருப்புக் கட்டடம், இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 70-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]