கரையோர புகையிரத சேவைக்கு பாதிப்பு

கரையோர புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று மாலை கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி  பயணித்த சாகரிக்கா ரயில் காலி புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் தடம்புரண்டமையை அடுத்தே கரையோர புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.அதன் போது இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றுள்ளன.

இந்நிலையில் புகையிரத பாதைக்கும் பாதிப்பு ஏற்பட்டுதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும் கரையோர புகையிரத சேவை நாளை காலை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை கொழும்பிலிருந்து ஜின்தொட்ட மற்றும் அம்பலாங்கொட வரையில் மட்டுபடுத்தப்பட்ட புகையிரத சேவைகள் இடம்பெற்றுவருவதாக .