கருவளையத்தால் அவதிப்படுபவர்களா நீங்கள்? இனி கவலையை விடுங்க இதோ சூப்பர் டிப்ஸ்

கண்கள் நமக்கு மிக முக்கியமான உறுப்பு. உலகை காணமட்டுமல்லாமல் நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதிலும் கண் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண்களில் ஏற்படும் பாதிப்புகளினால் முக அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்று அனைவரும் கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்கின்றனர்.

கண்களில் ஏற்படும் பாதிப்புகளில் கண்களுக்கு கீழே ஏற்படும் கரும்படலமும் ஒன்று. கண்களுக்கு கீழே காணப்படும் கரும்படலங்களும் கருவளையமும் ஒன்று என நினைக்கின்றனர். அனால் இரண்டும் வேறு.

இரண்டும் வெவ்வேறு காரணங்களால் வருகின்றன. கருவளையம் கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் சேதத்தினால் கண்களின் கீழே உள்ள தோல் கருப்பாக காணப்படுகிறது. இதை தவிர காயங்கள், கண்களை சரியாக கவனிக்காமை, சத்துக் குறைபாடு போன்றவைகளினால் கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

வலி, அழற்சி, வீக்கம் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள். எனவே கண்களைப் பாதுகாக்க நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும். நம்மை கலக்கமடைய செய்யும் இத்தகைய பாதிப்பில் இருந்து எளிய வழிகளில் குணம் பெற சில வழிகளைப் பார்ப்போம்.

ஐஸ்
ஐஸ் கண்களில் ஏற்படும் கருமைக்கான அறிகுறிகளைக் குறைக்கிறது. ஐஸ் கண்களின் கீழே உள்ள சேதமடைந்த ரத்தக்குழாய்களை சரி செய்து, அவற்றை மரத்துப் போகச்செய்து, வலியைக் குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஐஸ் கட்டி வீக்கத்தையும் குறைக்கும்.

கண்களைச் சுற்றி ஐஸ் ஒத்தடம் கொடுப்பது கண்களை பாதுகாக்க மிகவும் பயனுள்ள முறையாகும். சூடான அழுத்தம் கண்களைச் சுற்றி வெது வெதுப்பான அழுத்தம் கொடுக்கும் போது நமக்கு கண் கருமையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கண்களுக்கு கீழே ஏற்படும் வீக்கத்திற்கும் இது நிவாரணம் கொடுக்கும். கண்களை சுற்றி அடிக்கடி இவ்வாறு செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் கற்றாழையில் உள்ள குணமாக்கும் தன்மை மற்றும் அழற்சியை அழிக்கும் பண்புகள் அழற்சியையும் வீக்கத்தையும் குறைத்து, இரத்த நாளங்களை சரி செய்து கண்களைச் சுற்றி ஏற்படும் கரும்படலத்தை குணமாக்குகிறது. பிரெஷான கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள தோலின் மீது மென்மையாக தடவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்யும் போது கரும்படலத்தின் அடர்த்தி குறைந்து விடும்.

பப்பாளி கூழ் பப்பாளி நம் சருமத்திற்கு நன்மை செய்யும் மிக அற்புதமான படைப்பு. பப்பாளி கூழில் உள்ள பயனுள்ள என்ஜைம்கள் சரும ஆரோக்கியத்தை பேணுவதில் வல்லவை. கண்களின் கீழே ஏற்படும் வீக்கத்தையும், கரும்படலத்தையும் மட்டுமல்லாமல் கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களையும் சரி செய்து தோலில் ஏற்படும் ரத்தப் போக்கை குணமாக்குகிறது. பப்பாளி கூழை கண்களின் கீழே உள்ள தோலில் தடவி நாம் இத்தகைய அற்புத நன்மைகளைப் பெறலாம்.

மஞ்சள் தூள் கண்களைச் சுற்றி ஏற்பட்ட கரும் படலத்தினால் வரும் வலியையும், அழற்சியையும் சரி செய்ய மஞ்சள் தூளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன. சிறந்த குணமாக்கும் தன்மையும் கொண்டுள்ள மஞ்சள் தூள் கண்களின் கீழே உள்ள சேதமடைந்த ரத்த நாளங்களை சரி செய்து கண்களில் ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்துகிறது.

மஞ்சள் தூளை பசை போல் செய்து சருமத்தின் மேல் தடவ வேண்டும். உடனடி நிவாரணம் பெற தினமும் தொடர்ந்து இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும்.

தேன்
தேனும் நம் சருமத்திற்கு நன்மை செய்யும் மிக அற்புதமான படைப்பு. தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு வலியையும் அழற்சியையும் குறைக்கிறது. இது மட்டுமல்லாமல் தேன் தோலின் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது, ரத்தப்போக்கு ஏற்படுத்தும் ரத்த நாளங்களை குணமாக்குகின்றது.

தேனை நேரடியாக பாதிக்கப்பட்ட தோலின் மீது தடவி வலி தரும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். தொடர்ந்து அடிக்கடி தேனை தடவுவதன் மூலம் கண்களின் கீழே ஏற்படும் கருமையை விரைவில் போக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணையில் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது. இது கண்களைச் சுற்றி உள்ள கரும்படலத்தினால் ஏற்படும் அழற்சி மற்றும் வலியைப் போக்குகிறது. இது கண்களின் கீழே ஏற்படும் வெடிப்பையும் சரி செய்கிறது. மேலும் தோலுக்கு ஈரத் தன்மையை தந்து தோலை மிருதுவாக்குகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் தடவுவது தோலுக்கு மிகவும் நல்லது.

சந்தனப்பொடி கண்களின் கீழே உள்ள கரும்படலத்தை குறைக்க சந்தனப் பொடியையும் பயன்படுத்தலாம். சந்தனக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து, சந்தனத்தை குழைத்து, தோலின் மீது தடவ வேண்டும், அல்லது சந்தனப்பொடியையும் உபயோகிக்கலாம். இதைத் தொடர்ந்து செய்வது நல்ல பலனைத் தரும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]