‘கருப்பு ஜூலை’யை மக்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும்

கருப்பு ஜூலை

‘கருப்பு ஜூலை’யை மக்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும்

மக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு படையினரும் பொலிஸாரும் உள்ள நிலையில், எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே  சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையர்கள், அண்மைய வன்முறைகள் கூட விரைவாக மறந்துவிடக் கூடும். ஆனாலும், 30 வருட போரினால் ஏற்பட்ட பின்னடைவுகளையும், கருப்பு ஜூலை போன்ற சம்பவங்களையும் மக்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

கண்டியில் கடந்த வாரம் நடந்தேறிய சம்பவங்கள் நாட்டின் பெயருக்கு மாத்திரம் களங்கத்தை ஏற்படுத்தவில்லை. அது பொருளாதாரத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை  சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.