கருப்பின சிறுவனைக் கொன்ற பொலிஸ்காரருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவில் கருப்பின சிறுவனைக் கொன்ற பொலிஸ்காரருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்காரர் ஆலிவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருப்பின சிறுவனைக் கொன்ற வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சாட்சியங்களிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே நீதிபதி தனது தீர்ப்பில், ஆலிவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே உள்ள ஹிஸ்பேனிக் நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மதுவிருந்தில் பங்கேற்றிருப்பதாக காவல்துறைக்கு தககல் கிடைத்தது.

கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், விருந்து நடந்ததாக கூறப்படும் வீட்டை நெருங்கியதை அறிந்த சிறுவர்கள் சிலர் ஒரு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சந்தேகமடைந்த பொலிசார் அந்த காரை நிறுத்த முயன்றுள்ளபோதும், காரை நிறுத்தாமல் சென்றதால், பொலிஸ்காரரான ராய் ஆலிவர், காருக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் எர்வர்ட்ஸ் என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.

கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க பொலிசாரின் செயல் இனவெறியை காட்டுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக பொலிஸ்காரர் ஆலிவர் (வயது 38) கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டதோடு, பணியில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பின சிறுவனைக்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]