கருணை மனு கையெழுத்து போராட்டம்- அம்மாவை இழந்த இரு சிறார்களின் கூக்குரல்

மனித உரிமை ஆர்வலர்களே & அமைப்புகளே
சமூக ஆர்வலர்களே,
பொது அமைப்புகளே,
மாதர் சங்கங்களே,
கிராம அபிவிருத்தி சங்கங்களே,
தொண்டு நிறுவனங்களே,

கருணை மனு கையெழுத்து போராட்டம், மற்று அமைதிப் பேரணிக்காண அழைப்பு.

தாயை இழந்து தந்தையை பிரிந்து வாழும் கனிதரன்(வயது-13) மற்றும் சங்கீதா(வயது-11) ஆகிய இரு சிறுவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தந்தையார் ஆகிய ஆயுள் தண்டனை கைதி திரு.ச.ஆனந்தசுதாகர் அவர்களின் பொது மன்னிப்பு கோரிய கருணை மனு கையெழுத்து போராட்டம் 21-03-2018 அன்றைய தினம் “தமிழ் இளைஞர் சமூகம்” விசுவமடு பகுதியில் ஆரம்பித்தது.

தொடர்ந்து 21-03-2018 தொடக்கம் 25-03-2018 வரை கருணை மனு கையெழுத்து
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேகரித்து எதிர் வரும் 26-03-2018 திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்க உள்ளோம்.

ஆகவே
23-03-2018 வெள்ளிக் கிழமை கருணை மனு கையெழுத்து போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட கொட்டகை முன்னிலையில் நடைபெற உள்ளது. ஆகவே அனைவரும் வருகை தந்து பொது மன்னிப்பு கோரிய கருணை மனுவிற்கு ஆதரவு வழங்குங்கள்.

தொடர்ந்து வடக்கில் 23-03-2018 வெள்ளிக் கிழமை வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்று யாழ்ப்பாணத்திலும் கருணை மனுவிற்கு கையெழுத்து சேகரிக்க முன்வாருங்கள்.

கருணை மனுவின் பிரதிகளை பெற்று உங்கள் பிரதேசத்தில் கையொப்பம் சேகரிக்க உங்கள் பிரதேசத்திற்கு நாம் அனுப்ப தயார்.

கையெழுத்து போராட்டங்கள் நடைபெறும் இடங்கள்
21-03-2018 விசுவமடு
23-03-2018 கிளிநொச்சி
24-03-2018 யாழ்ப்பாணம்
25-04-2018 வவுனியா & மன்னார்

26-03-2018 மகஜர் கையளிப்பு (கிளிநொச்சி)

23-03-2018 கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கையெழுத்து போராட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வந்து மனிதநேய பணியில் இணையுங்கள்.

அழைப்பு:
-தமிழ் இளையஞர் சமூகம்-
கிளிநொச்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]