கருணாவுக்கு மஹிந்தவால் கிடைக்கபோகும் அமைச்சுப்பதவி என்ன தெரியுமா??

இலங்கையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச நாட்டின் அனைத்து பதவி கட்டமைப்புகளிலும் மாற்றம் செய்து வருகின்றார்.

வடக்கு மாகாணத்துக்கு தமிழ் பேசும் ஆளுநர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனின் பெயர் முன்மொளியப்ப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவி முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரனுக்கு வழங்கப்படவுள்ளதாக சில ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருணா இதுவரை மஹிந்த தரப்புடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருப்பதுடன் மஹிந்த தரப்பின் அண்மைய பேரம் பேசல் நடவடிக்கைகளுக்கும் துணையாக செயற்பட்டு வருகின்றார்.

மகிந்தவின் கடைசி ஆட்சி காலத்தில் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்த போதும் இந்த புதிய அமைச்சரவையில் இதுவரை எந்தவிதமான அமைச்சு பதவியும் வழங்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் கருணாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி காத்திருப்பது உண்மை என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]