முகப்பு News India கருணாநிதி மரணமா ?? தகவல் வெளியிடுவதில் சிக்கல், 1லட்சம் பொலீஸ் குவிப்பு

கருணாநிதி மரணமா ?? தகவல் வெளியிடுவதில் சிக்கல், 1லட்சம் பொலீஸ் குவிப்பு

கருணாநிதி மரணமா ?? தகவல் வெளியிடுவதில் சிக்கல், 1லட்சம் போலீஸ் காவலில்

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், மருத்துவமனை முன் பொலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

இதனால் தொண்டர்கள் தொடர்ந்து பதட்டத்துடன் வெளியே காத்துக் கொண்டுள்ளனர். நேற்று வெளியிட்ட அறிக்கையில் 24 மணி நேரத்துக்குப் பின்னரே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்று கூறப்பட்டது.

இதனால் இன்று மாலை அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை, மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com