கருணாநிதியின் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கனிமொழி தெரிவிப்பு

கலைஞர் மு.கருணாநிதி நலமாக உள்ளார் என்றும், தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டுமென்றும், தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்றுவரும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் வைத்தியசாலை முன்பாக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் தொண்டர்கள் படையை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் சிக்கலை எதிர்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டுமென கனிமொழி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]