முகப்பு News India கருணாநிதி உடல்நலம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கருணாநிதி உடல்நலம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கருணாநிதி உடல்நலம் குறித்து திட்டமிட்டே வதந்தி பரப்பப்படுவதாக, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளது சாதாரண வார்த்தைகள் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்திகள் றெக்கை கெட்டி பறக்க துவங்கியது, வியாழக்கிழமை மாலை 6.30 மணியில் இருந்துதான்.

இதற்கு காரணம் கருணாநிதிக்கு சிகிச்சையளித்து வரும் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பு.

காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று இருப்பதால் காய்ச்சல் இருப்பதாகவும், அதனால் அவருக்கு லேசான, உடல் நலிவு ஏற்பட்டுள்ளதாகவும், யாரும் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாக, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சீனியர் அமைச்சர்கள் மொத்தமாக போய் இறங்குகிறார்கள்.

ஸ்டாலினை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார்கள். அப்போதுதான், பரபரப்பு இன்னும் அதிகரிக்கிறது.

ஒருபக்கம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துவரும் பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்கள் என அனைவரும் ஸ்டாலினுக்கு போன் செய்து கருணாநிதி நலம் விசாரிக்கிறார்கள்.

உடல் நலம் தேற வேண்டுவதாக, டுவிட் செய்கிறார்கள். இதனால் கருணாநிதி உடல் நிலை என்பது தேசிய அளவில் கவனிக்கப்படும் விடயமாக மாறியது.

ஆனால் இந்த நேரத்தில் இதையெல்லாம் செய்வது வேண்டுமென்றே நடத்தப்படும் நாடகம் என திமுக வட்டாரத்தில் சந்தேகம் எழுப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த நாடே தற்போது கருணாநிதி பற்றிதான் பேசுகிறது. பெரும் புயலை கிளப்பிக்கொண்டிருந்த, தனி நபருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராணுவ விமானத்தை கொடுத்த விடயம் மறந்துவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com