கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார் .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]