கரீபியன் பிரீமியர் லீக் தொடரை கைபற்றியது டிரின்பகோ நைட் ரைடர்ஸ்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரை டிரின்பகோ நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில கைபற்றியுள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 தொடரின், 12ஆவது லீக் போட்டி லாடர்ஹில், புளோரிடாவில் நடைபெற்றது. இப்போட்டியில், டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைதொடர்ந்து, 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக கொலின் முன்ரோ 67 ஓட்டங்களையும், டேரன் பிராவோ 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இமாட் வசிம் மற்றும் தோமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின், கரி பியர் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]