வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி யாழில்

கரிகோச்சி

நீண்ட கால இடைவெளியின் பின்னர் இரண்டாவது முறையாக நேற்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் (7 மணியளவில்) யாழ்ப்பாணம் வந்தது.

நேற்று காலை (26) ஆம் திகதிகாலை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட ரயில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு மாலை 7 மணியளவில் வருகை தந்தது. இந்த ரயில் யாழ்.ரயில் நிலையத்தை 4 மணியளவில் வருகை தரும் என சொல்லப்பட்டாலும் ஆனையிறவில் வந்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக நிண்டநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் அது சீர் செய்யப்பட்டு யாழ்.ரயில் நிலையத்திற்கு 7 மணியளவில் வருகை தந்தது.

இன்று யாழ்.ரயில் நிலையத்திலிருந்து சுற்றுலாப்பயணிகளுடன் கல்கிசை நோக்கி செல்லவுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கு ரயிலில் நான்கு AC சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட காலத்திற்கு பின்னர் வந்த இந்த கரிக்கோச்சி ரயிலினைப் பார்ப்பதற்கு சிறுவர்கள் பெரியவர்கள் என வருகை தந்து, பார்த்து புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கரிகோச்சிகரிகோச்சிகரிகோச்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]