கம்பீரின் சாதனையை முறியடித்த வோர்னர் ஐதராபாத் 5 ஓட்டங்களால் அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்து கௌத்தம் கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார் வோர்னர்.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008ஆம் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டது. தற்போது 10ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டதில், வோனர் 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்த அரைசதம் மூலம் வோர்னர் ஐ.பி.எல். தொடரில் 34 அரைசதங்கள் அடித்துள்ளார்.

இதற்கு முன்னர் காம்பீர் 33 அரைசதங்கள் அடித்து ஐ.பி.எல். தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றிருந்தார். அந்தச் சாதனையை தற்போது வோர்னர் முறியடித்துள்ளார்.

பந்துவீச்சில், சர்மா மற்றும் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

160 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன் காரணமாக ஐதராபாத் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில், வோரா 95 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றுக்கொடுத்தும் அது பயனில்லாமல் போனது.

பந்துவீச்சில், புவனேஸ்வர குமார் 5விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

கம்பீரின் சாதனையை

கம்பீரின் சாதனையை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]