கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

கம்பஹா

கம்பஹா கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தனகல ஓயா பெருக்கெடுத்திருப்பதால் அதனை அண்டியுள்ள பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த வெள்ளம் இதுவரை வழிந்தோடவில்லை என கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் குறித்த பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினத்திற்குப் பதிலாக மற்றுமொரு தினத்தில் கல்வி நடவடிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அமைச்சர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]