முகப்பு News Local News கம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை

கம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை

கம்பஹா தரலுவ பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என எமது முத்தமிழ் செய்திச்சேவைக்கு தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்

தற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, ஒரே தரத்தினையுடைய இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவுச் சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா,

அனைத்து விடயங்களுக்கும் மன்னிப்பு கேட்கின்றேன் என்னை மன்னித்து விடுங்கள். தன்னால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளேன். நான் உயிரோடு வாழ்வேனாயின் உங்களுக்கு என்றுமே நிம்மதியுடன் வாழ கிடைக்காது. ஆகையினாலேயே நான் மேற்கொண்ட தீர்மானம் எனக்கு சரியென்று நினைக்க தோன்றியது. ஆகையினால் அனைத்து விடயங்களிலிருந்தும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்து கண்ணீர் விட வேண்டாம். என்னோடு என் விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள்.

அக்காவுடனும் தம்பியுடனும் மகிழ்ச்சியாக நீங்கள் வாழ வேண்டும். உங்களிடம் நிறைய அன்பு வைத்துள்ளேன். அப்பாவும் உயிரிழந்த நிலையில் இத்தனை காலம் என்னை பார்த்து கொண்டமைக்கு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும். மீண்டும் வீட்டிற்கு வருகை தந்து சமூகத்திற்கு என்னாள் முகம் கொடுக்க இயலாது. என்னை நினைத்து அழவேண்டாம். தினமும் மகிழ்ச்சியாக வழமைபோன்று வாழவேண்டும்.

நான் உங்கள் மீது அளவு கடந்த பாசம் அம்மா. இயேசு உங்களுக்கு துணை புரிவார். எப்போதாவது என் மீது உங்களுக்கு நினைவு வந்தால் தயவு செய்து சாபமிட்டு விடாதீர்கள். அக்காவின் திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும். எனக்கு நீங்கள் அனைவரும் முக்கியமானவர்கள். உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கவலையை பெற்றுக்கொடுக்க எனது மனம் இடம்கொடுக்கவில்லை. ஆகையினாலேயே இந்த தீர்மானத்தினை எடுத்தேன். இயேசுவின் துணை அம்மா.
உங்களின் அன்பிற்குரிய மகள்

இவ்வாறு குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது….

குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களாவர்.
யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, இவர்களுக்கு வேறு இளைஞர்களால் ஏதேனும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com