கமல் ரஜினியை கண்ணீரில் ஆழ்த்தி சென்ற கன்னி மயிலின் மறைவு

‘கமல் – ரஜினி’யை மட்டுமல்ல சினிமா துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி சென்றுள்ளது நடிகை ஶ்ரீதேவி அவர்களின் மரணம். இந்த சம்பவத்தை தொடர்ந்து பலரும் தங்கள் இரங்கல்களை ஊடங்களுக்கு தந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டதட்ட 27 படங்களில் அவரோடு ஒன்றாக நடித்த கமலும் தன் இரங்கல் செய்தியை இவ்வாரு வெளியிட்டிருக்கிறார்.

கமல் ரஜினி
Kamal , Sridevi , Rajinikanth

“எனக்கு ஶ்ரீதேவி அவர்களை சிறு வயது முதலே தெரியும், அதாவது 16 வயதிலிருந்தே நட்பு பராட்டியுள்ளோம், அவர்கள் முயன்று முயன்று படிப்படியாக பல பாதைகளை கடந்து வந்தவரென்றும். கூட நடிக்கும் நடிகனாக மட்டுமின்றி, அவரோடு நடிக்கும் போது நடிப்பும், நடனமும் கற்று தந்திருப்பதாகவும், உச்ச நடிகை ஶ்ரீதேவி நடிகர் கமல் போலே புது விடயங்களை கற்றுக்கொள்வதில் ஆசையுடையவரென்றும், தங்கள் நட்பில் அன்பும், பாசமும், வாஞ்சையும் இருந்ததாகவும். இன்றைய இளம் நடிகர்களுக்கு அவர் உத்வேகமளித்திருப்பதாகவும். மேலும் கண்தாசன் எழுதிய “கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே” என்ற தலாட்டு மெட்டில் அமைந்த பாட்டில் அந்த மயிலின் உதிர்ந்த ஞாபங்களை கண்ணீரோடு வெளியிடுகிறார் உலகநாயகன் கமல்.

கமல் ரஜினி
Sridevi, KamalHaasan

இதே போல் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் “அவர் இறந்த போன செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், 40 ஆண்டுகளுக்கு மேல் அவருடைய நண்பர் என்றும் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த மொழி படங்களில் அத்துனை சிறப்பாக நடித்தது ஆச்சரியம்தான் என்றும், புகைப்பட கருவிகளிற்க்கு முன்பும், பின்பும் அவர் வேறுப்பட்ட முகங்களையுடையவரென்றும், யாருடனும் இதுவரையில் எந்த கோபமும் காட்டாத ஶ்ரீதேவி  மறைந்தது பெரும் இழப்பு என்றும் ரஜனிகாந்த் கூறினார்.

கமல் ரஜினி
Rajanikanth,Sridevi

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]