கமல் நடத்தி வரும் பிக்பாஸ் செட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதில் போட்டியாளர்களாக 14 பேர் பங்கேற்றனர். இதில் சிலர் வெளியேறிவிட்டனர். தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.

கமல் நடத்தி வரும்

24 மணிநேரமும் கண்காணிக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்காக சென்னை புறநகர் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல தொழில்நுட்பக் கலைஞர்கள் நிகழ்ச்சிக்காக இரவும், பகலுமாக உழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்காக பணியாற்றி வந்த மும்பையை சேர்ந்த, கரீம் முகமது ஷேக் என்ற 28 வயது இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஷேக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]