கமல்ஹாசன் மீது புகார்

கமல்ஹாசன் மீது புகார்.

கமல் ஹாசன்

தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

 

இதன் காரணமாக தமிழ் நாட்டில் பல இடங்களில் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில் சண்டைக்கோழி 2 திரைப்பட குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கினார்கள்.

கமல்ஹாசன்

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார்.

பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர் நடிகர் கமல் மீது பொலிஸில் புகார் வழங்கியுள்ளார்.

நிலவேம்பு கஷாயம் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது எனவும், தாம் 10 வருட காலமாக நிலவேம்பு கஷாயம் அருந்தி வருவதாகவும், நடிகர் கமல்ஹாசன் குறித்த கஷாயம் தொடர்பாக தவறான கருத்தை பரப்பி வருவதாகவும் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]