கமல்ஹாசன் மீது புகார்

RK நகர் தேர்தல்

கமல்ஹாசன் மீது புகார்

சில தினங்களாக அரசியல் விமர்சனங்கள் பதிவிடுவதை தவிர்த்து வந்தார் கமல். வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் சிலவாரங்களுக்கு முன் முடிவடைந்த RK நகர் தேர்தல் பற்றி விமர்சித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்து இருந்தார்.

இதை தொடர்ந்து வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசன் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடுமலைப்பேட்டையில் வழக்கறிஞர் சாதிக்பாஷா என்பவர் கமல் கூறிய கருத்து தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதென்றும் வாக்காளர்களை பிச்சைகாரர்கள் போன்று விமர்சித்த கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]