கமலின் அரசியல் குறித்த கருத்து!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு நடிகர் கமல் தனது டுவீட்டரில் ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமிக்கும் ஒருபக்கம் பதில் அளித்து கருத்தை பதிவிட்டு வந்தார்.

ஜல்லிக்கட்டு போரட்டம் முடிந்தவுடன் பத்திரிக்கையாள சந்திப்பு வைத்து தமிழனாக தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். இதையடுத்து கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று சமூக வலைதளத்தில் குரல் எழுப்ப தொடங்கினர்.

இதற்கு வருத்தம் தெரிவித்து கமல், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

“கேள்.. தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே. உன்னுடன் நிற்கத்துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச்சொல்வாய்?. எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா” என்று பதிவிட்டுள்ளார்.