கமலஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தொடங்கியது

கமலஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தொடங்கியது

விஸ்வரூபம் 2

கமல்ஹாசனின் இயக்கத்திலும் மற்றும் நடிப்பிலும், நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம். இப்படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா போன்றோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளையும் சேர்த்து ஷூட் செய்து வைத்திருந்தார் கமல். எனவே, உடனடியாக இரண்டாம் பாகம் தயாரானது. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனையால், படம் பாதியிலேயே நின்றது.

இறுதியாக கமல்ஹாசன், ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்தை வாங்கி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை ஆரம்பித்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் பங்கு பெற்றார். பிக் பாஸ் முடிந்ததும் படத்தின் மீதமுள்ள காட்சிகளை ஷூட் செய்வார் என்று நினைத்தால், திடீரென தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.

எனவே, இப்போதைக்குப் படம் ரிலீஸாகாது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார் கமல். சில காட்சிகளே எடுக்க வேண்டி இருப்பதால், விரைவில் இந்தப் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ரிலீஸ் ஆகும் போது யார் யார் என்ன பிரச்னையை கிளப்பி விடுவார்களோ? தெரியவில்லை!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]