கபில்தேவ் சாதனையை முறியடித்த ஹேரத்திற்கு ஷேன்வோர்ன் மற்றும் வசிம் அக்ரமின் சாதனைகளையும் முறியடிக்க வாய்ப்பு

rangana herathஇலங்கை அணி நேற்று பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஹேரத்தின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் ரங்க ஹேரத் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அத்துடன் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 100 விக்கட்டுக்களை பெற்றவர் என சாதனையையும் நிலைநாட்டினார்.

அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 101 விக்கட்டுக்களை பெற்றுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் கபில்தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 99 விக்கட்டுக்களை பெற்றிருந்தமையே இதுநாள் வரையில் சாதனையாக இருந்தது.
அதனை ஹேரத் நேற்று முறியடித்தார்.

அத்துடன்இ 400 விக்கட்டுக்களை வீழ்த்திய இலங்கையர்கள் பட்டியலில் அவர் 2வது இடத்தை பெற்றுள்ளார்.

முதலாவது இடத்தில் முத்தையா முரளிதரன் காணப்படுகின்றார்.
நேற்று ஹேரத் தமது 39வது வயதிலேயே 400 விக்கட்டுக்கள் பெற்றார்.
அதுவும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

இதற்கு முன்னதாக நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சேர் ரிச்சர்ட் ஹாட்லி 38 வயதில் 400 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்ததமையே சாதனையாக இருந்தது.

இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹேரத் 14 இடத்தை பெற்றுள்ளார்.

அந்த பட்டியலில் முத்தையா முரளிதரன் 800 விக்கட்டுக்களை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அத்துமாத்திரமின்றி 400 விக்கட்டுக்களை வீழ்த்திய முதலாவது இடது கை பந்துவீச்சாளர் என்ற பெறுமையும் ஹேரத் பெற்றார்.

இரண்டாவது இடத்தில் ஓய்வு பெற்ற நியுசிலாந்து அணி வீரர் டேனியல் விட்டோரி 362 விக்கட்டுக்களுடன் காணப்படுகிறார்.

ரங்கன ஹேரத் இதுவரையில் 10 விக்கட்டுக்கள் என்ற பிரதிகளை இதுவரையில் 9 முறைப்பெற்றுள்ளார்.

இந்தபட்டியில் அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் 10 தடவைகள் பெற்று இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றார்.
முரளி அந்த பட்டியலில் 22 தடவைகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இதுவரையில் 4 வீரர்களே 400 விக்கட்டுக்களை பெற்றுள்ளனர்.

முத்தையா முரளிதரன், ஷேன் வோர்ன், அனில் கும்லே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர்.

அந்த பட்டியலில் 5வது இடத்தில் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் காணப்படுகின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]