கபாலி பட இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகரை டெல்லியில் சந்தித்த ராகுல் காந்தி – புகைப்படங்கள் உள்ளே

பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு ஜூலை 10-ம் தேதி மாலை டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்தது. ராகுல் காந்தியே ‘ட்வீட்’ மூலமாக தெரிவித்த பிறகுதான் இந்தத் தகவல் வெளியே தெரிந்தது. ரஞ்சித்துடன் அவரது படங்களில் தோன்றும் நடிகர் கலையரசனும் இணைந்து சந்தித்தார். இருவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி, அவற்றை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

பா.ரஞ்சித் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மெட்ராஸ், கபாலி, காலா போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன். ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடர விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்.

பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு, பா.ரஞ்சித் தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி,

பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசியல், கலை மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் மீதான சாதி-மதம் சார்ந்த மிரட்டல்கள் குறித்து பேசினோம். என்னை சந்தித்த ஒப்புக்கொண்டதற்கு நன்றி சார்! நமது விவாதம் சரியான வடிவம் பெறும் வகையில் தொடரும் முனைப்பில் இருக்கிறேன். ஒரு தேசிய தலைவர் அனைத்து தரப்பு கொள்கை சார்ந்தவர்களையும் சந்தித்து உரையாடுவது ஊக்கமளிப்பதாக இருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பேரறிவாளனை விடுவிப்பது குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தேன். அவரது விடுதலைக்கு எதிராக தங்கள் குடும்பத்தினர் இல்லை என்றும் தன்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருப்பதாகவும் ராகுல் கூறினார்’ என குறிப்பிட்டார்.

பா.ரஞ்சித், தலித் இளைஞர்களின் ஹீரோ?
இதைத் தாண்டி, பா.ரஞ்சித்தின் சந்திப்பில் 2019-ம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கணக்கும் இருப்பதாக தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஜிக்னேஷ் மேவானி ஒரு காரணம்!

குஜராத்தில் தலித் தலைவராக உருவெடுத்த ஜிக்னேஷ் மேவானி, சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. பதிலுக்கு ஜிக்னேஷ் மூலமாக குஜராத் தலித் வாக்கு வங்கியில் பெரும்பகுதியை காங்கிரஸ் தன் பக்கம் திருப்பியது.

தமிழ்நாட்டிலும் சமீப காலமாக பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக தலித் இளைஞர்கள் திரள்கிறார்கள். குறிப்பாக மதுரை பகுதியில் ஒடுக்கப்பட்ட இரு சமூகத்தினர் இடையே பிரச்னை வெடித்தபோது, நேரடியாக சென்று இரு சமூகத்தினரிடமும் அவர் பேசி சமரசம் செய்ததை பலரும் வரவேற்றனர்.

ஒரு படைப்பின் மூலம் ஏதாவது தாக்கத்தையோ விளைவையோ ஏற்படுத்த முடியுமா? என்று கேட்பவர்களுக்கு இந்த புகைப்படம் ஒரு உதாரணம்.ஒரு தேசிய கட்சியின் தலைவர் காலா படத்தை பார்த்ததின் விளைவு தான் இந்த சந்திப்பு.அண்ணன் பா.ரஞ்சித்திற்கு கிடைத்த மாபெரும் மரியாதை இது

கபாலி பட இயக்குநர் கபாலி பட இயக்குநர்

மெட்ராஸ், கபாலி, காலா படங்களில் தலித்தியம், அம்பேத்கரியம் பேசியதன் மூலமாகவும் தலித் இளைஞர்களில் பலரும் அவரை ஹீரோவாக பேசி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகளுடன் அதிகம் ஒட்டாமலேயே பா.ரஞ்சித் இயங்கி வருகிறார்.

இந்தச் சூழலில்தான் பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு, 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடந்ததாகவே கருத வேண்டியிருக்கிறது. குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஸ் தாகூர் என அமைப்பு ரீதியாக வலுப்பெறாத தலைவர்களை இணைத்துக்கொண்டே அவர்கள் சார்ந்த சமுதாய வாக்குகளை கபளீகரம் செய்த தந்திரத்தை தமிழகத்திலும் காங்கிரஸ் அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]