கபாலியில் காட்டாத வேகம் கரிகாலனில் நிச்சயமுண்டு

கரிகாலனில்
கபாலி படத்தில் என்னதான் ரஜினி சேர் வசனங்களிலையும், நடிப்பிலும் கலக்கியிருந்தாலும் “முன்னைய படங்கள்ல சூப்பர் ஸ்டாருக்குனு ஒரு பயர் இருக்கும் அது இங்கு இல்ல” அப்பிடினு ஆதங்கமடைந்த ரசிகர்கள்தான் அதிகம். படம் முழுக்க தான் தொலைத்த இளமையையும் , தன் குடும்பத்தையும் தேடும் போது இருக்க மன உளைச்சளையும், பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் அதிகமான இடங்களில் இயக்குனர் வெளிகாட்ட  முற்படும் போது, கதையில் உள்ள வேகம் குறைந்துவிடுகிறது.ஆனாலும் பா.ரஞ்சித்தை ரஜினிக்கு பிடித்துப்போக இன்னொரு படம் பண்ண கேட்டு இருந்தார்களாம் இமயம் ரஜினி.

கரிகாலனில்

இந்த குறைகள இல்லாம செய்ய ரஜினிக்காகவே புதிய தாதா (Gangstar) கதையை தேடி மும்பை போன ரஞ்சித், ஒரு பக்கா கதைய செட் பண்ணி ரஜினி சேர்கிட்ட சொல்லியிருக்கிறார். முதல்ல கதையில் ரவுடிசம் மட்டும்தான் இருக்கும்னு நினைச்சவருக்கு கதையை ரஞ்சித் சொல்லி முடிய, கதையில தான் அடங்காத கரிகாலனா வாழ்ந்து பார்த்துவிட்ட முழு சம்மதத்தோட படத்திற்க்கு ஓகே சொன்னாராம் ரஜினி. பின்பு ரஜியின் மருமகனான தனுஷ் தாயாரிப்பு பணிகளில் ஈடுபட்டார்.முதலில் தொடங்கப்பட்ட ஷங்கரின் 2.0 இன்னும் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாத நிலையில் இருப்பதால்,ஏற்கனவே எல்லா பணிகளும் முடிவடைந்த நிலையில் உள்ள காலா திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தனர் படக்குழுவினர்.

கரிகாலனில்

இந்த நிலையில் நேற்று வெளியான காலா பட டீசர் பல வகையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை எழுப்பியுள்ளது. திருநெல்வேலி தமிழ் பேசும் ரஜினி காலா என்ற கதாபத்திரத்தில் நடிச்சியிருக்காரு. கரிகாலனின் சுருக்கிய வடிவம்தான் காலா சேட்டு , அது மட்டுமல்லாது திருநெல்வேலி மாவட்டத்தில வணங்கப்படும் சிறுதெய்வத்தின் பெயர் கூட காலாவாம். இந்தியில் காலா என்பது கருப்பு நிறத்தை குறிக்குமாம்.

கரிகாலனில்

 இதனால் இந்த படத்தில் சமூகத்திற்க்காக போராடும் தலைவனா இருப்பாராம் கரிகாலன். இதில மனைவி, நான்கு பிள்ளைகள் ,பேர பிள்ளைகள் என குடும்பமா வாராரு இதில் சந்தோசத்தையும், அன்பையும் ,காதலையும் காட்டியிருக்காராம். இதே நேரம் சமூகம்னு வந்தா மக்களுக்காகவே பார்த்து பார்த்து செய்வாராம் காலா.இது மட்டும் இல்லாம ‘தளபதி’ படத்தில் வெற்றி படத்தில் ரஜினியோட இருந்த மம்முட்டி, சமூக படங்களில் மக்கள் பார்வையை தன் பக்கம் ஈர்த்துவச்சிருக்கும் சமுத்திரகனி. முன்னணி நடிகர்களான ஈஸ்வரி ராவ் ,ஹுமா குரேஷி மற்றும் பல முன்னணி நடிகர்களும் நடிச்சி இருக்காங்க.

கரிகாலனில்

இந்த படத்திற்கு மட்டும் கிராமங்களை அமைப்பதற்கு இருபத்தைந்து கோடிகள் செலவானதாம்.அதிக பொருட் செலவிலும் அதனை ஈடு செய்யும் நடிப்பிலும் கால, கபாலியை விட வேகம்தான்.அடங்கமறுக்கும் காலா  “ஒத்தையில நிக்கிறேன்லே மொத்தமா வால்லே” என்று சொல்லும் வசனம் அரசியல் பஞ்ச்சா??  இல்ல ரசிகர்கள படம்பார்க்க கூப்பிட்டாரோ?? படம் வந்ததும் விமர்சனத்தில் பார்ப்போம்.