கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி

இலங்கை அரசாங்கம் மற்றும் கனடா அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரலவின் ஆலோசனைக்கு அமைய, பணியகத்தின் விசேட விசாரணை குழுவின் அதிகாரிகள், இந்த மோசடியின் பிரதான சந்தேக நபரை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி வர்த்தக தொகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் நாட்டின் பல பாகங்களில் உள்ளவர்களிடம் மோசடியாக கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக பாசாங்கு காட்டி முற்பணமாக 4 லட்சம் ரூபா வரை பெற்று வந்துள்ளார்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட 3 பேர் வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையிட்டுள்ள நிலையில், குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]