கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பு

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வட மாகாண கல்வி அமைச்சர் எதிர்வரும் 5 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலையாக முடியாது என வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமக்கான அழைப்பாணையில் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக தம்மால் முன்னிலையாக முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]